பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு! - உச்சநீதிமன்றம்

language dropdown

ஊரடங்கு காலம் முடிவடைந்ததிலிருந்து 10 நாட்கள் நீட்டிப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. 21 நாள் ஊரடங்கு காலம் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும், அதாவது விநியோகஸ்தர்கள் தங்கள் பிஎஸ் 4 பங்குகளை 2020 ஏப்ரல் 24 வரை விற்கலாம்.

expand View Photos
நீட்டிக்கப்பட்ட காலத்தில் விற்கப்படாத பிஎஸ் 4 வாகனங்களில் 10% மட்டுமே விற்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் வாதிட்டது

Highlights

  • பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு-உச்சநீதிமன்றம்
  • ஊரடங்கு முடிந்ததும் டீலர்கள் பிஎஸ் 4 வாகனங்களை 10 நாட்களுக்கு விற்கலாம்
  • 10% மட்டுமே விற்க முடியும், ஆனால் டெல்லி & NCR-ல் பிஎஸ் 4 விற்பனை இல்லை

இந்தியாவில் பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது உச்சநீதிமன்றம். ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 நாட்கள், அதாவது ஏப்ரல் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வது கடினம். டெல்லி என்.சி.ஆரில் எந்த பிஎஸ் 4 வாகனத்தையும் விற்க முடியாது. மேலும், விற்பனை செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் வாகனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு காலம் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், விநியோகஸ்தர்கள் தங்கள் பிஎஸ் 4 வாகனங்களை 2020 ஏப்ரல் 24 வரை விற்பனை செய்யலாம். 

bq9f0nn
வீடியோ கான்ஃப்ரன்ஸ் விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி தீபக் குப்தா

பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான மார்ச் 31 காலக்கெடுவை நீட்டிக்க ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் (Federation of Automobile Dealers Association - FADA) மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Automobile Manufacturers - SIAM) ஆகியவை உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தன. இதில், 15,000 பயணிகள் கார்கள், 12,000 வணிக வாகனங்கள், 7 லட்சம் 2 சக்கர வாகனங்கள் விற்பனை செய்யாமல் உள்ளன என்று ஃபாடா கூறியது. இதற்கிடையில், தொழில்துறையின் மந்தநிலை, அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

0 Comments

கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய ஆட்டோமொபைல் துறையில் சுமார், ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது, ​​இரு சக்கர வாகனம் தொழிற்சாலை ரூ.4,600 கோடி மதிப்புள்ள பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்யலாம் உள்ளன. மேலும், சுமார் 8,35,000 யூனிட் வாகனங்கள் விற்கப்படாமல் உள்ளன. மேலும், உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில்,  நாள் ஒன்றுக்கு ரூ.2,300 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) கூறியுள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News