BS4 வாகன விற்பனை விதிமீறல்.. வழக்கு விசாரணை ஜூலை 31 ஆம் தேதி ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்!

language dropdown

1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்க அனுமதியளிக்கப்பட்டது, ஆனால், 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது

expand View Photos
பிஎஸ்4 விற்பனை விதிமீறல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

இந்தியாவில் பிஎஸ் 6 தரத்திலான இன்ஜின்களைக் கொண்ட வாகனத்தை மட்டுமே விற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மார்ச் 31 ஆம் தேதி வரையில் மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை விற்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். ஆனால், விற்பனை மந்தம், ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கின. 

இதனையடுத்து ஆட்டோ டீலர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் பிஎஸ்4 வாகனங்களை விற்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் வரையில் மட்டும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கியது. மேலும், தேங்கிய வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் அதுவம் டெல்லியில் மட்டுமே விற்க வேண்டும்  என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

u1ekuja

ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் வரையில் பிஎஸ்4 வாகனங்களை விற்க அனுமதியளிக்கப்பட்டது

ஆனால், ஊரடங்கு தளர்த்திய பிறகு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமான வாகனங்கள் விற்கப்பட்டன. இது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வர, ஜூலை 8 ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் விற்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்துக்குத் தெரியவந்தது. மேலும், பிஎஸ்4 விற்பனைக்கு வழங்கிய 10 நாட்கள் கால அவகாசத்தைத் திரும்பப் பெற்றது. மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு விற்கப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

9d8fb4bo

ஊரடங்கிற்குப் பிறகு 1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது

0 Comments

இந்த நிலையில், பிஎஸ்4 விற்பனை விதிமீறல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், பிஸ்எஸ்4 வாகன விற்பனையின் பதிவு எண்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜூலை 31 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அதற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.