89வது ஜெனிவா சர்வதேச மோட்டர் ஷோ, ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாடா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஐந்து கார்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில், டாடா நிறுவனத்தின் ப்ரீமியம் ஹாட்ச்பேக் மாடலான அல்ட்ராஸ் காரும் ஒன்று. அஜைல் லைட் ப்ளேக்சிபல் அட்வாண்ஸ்டு (அல்பா) வடிவமைப்பில் உருவாகியுள்ள அல்ட்ராஸ் கார், காஸோலின், டீசல் மற்றும் எலக்ட்ரிக் மாடலில் கிடைக்கும்.

இந்த கார் எலக்ட்ரிக் மாடலிலும் கிடைக்கும்
இம்பாக்ட் 2.0 டிசைனில் தயாரிக்கப்படும் இரண்டாவது கார் அல்ட்ராஸ் ஆகும். புது டிசைன், முற்றிலும் அப்டேட்டட் டெக்னாலஜி, பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்து விஷயங்களும் இந்த காரில் உள்ளது.
அல்பட்ராஸ் பறவையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்ட அல்ட்ராஸ் காரின் பெயர் இதுவரை 45 எக்ஸ் என்றே அழைக்கப்பட்டது. இந்த் காரை டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக அறிமுகம் செய்தது டாடா. இந்த டாடா அல்ட்ராஸ் கார் மூலம் இந்தியாவில் ப்ரீமியம் ஹாட்ச்பேக் பிரிவில் நுழைந்துள்ளது டாடா. இந்த கார் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.