தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்கெட் விரிவடைந்து வருகிறது. இதனால் பல முன்னணி கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் திட்டத்தை டாடா அறிவித்துள்ளது.
2019 – 20 பொருளாதார ஆண்டின் இறுதியில் இந்தியாவில் தங்களது இரண்டாவது எலக்ட்ரிக் காரை டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்து மெட்ரோகளில் 300 ஃபாஸ்ட் சார்ஜ் நிலையங்கள் வைக்கவுள்ளது. இதற்காக டாடா பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து carandbike.com க்கு டாடா மோட்டர்ஸின் பிசினஸ் மற்றும் கார்ப்பரேட் பிரசிடண்ட் சைலேஷ் சந்திரா கூறுகையில், ‘நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டியுள்ளது. ஹைய் மாடல் டிகார் இவி யை இந்த பொருளாதார ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளோம்' என்றார்.

டாடா நெக்சானிலும் எலக்ட்ரிக் வகை வரும்
மேலும் அவர் கூறுகையில், ‘நாங்கள் தனியாரை எண்ணி இதனை அறிமுகம் செய்கிறோம். இதனால் பல மாற்றங்களை இதில் கொண்டு வரலாம். டிகாரின் ஹை எண்ட் மாடலையும் நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம்' என்றார்.
சமீபத்தில் நடந்த கம்பெனியின் ஆண்டு இறுதி மீட்டிங்கில் பேசிய டாடா மோட்டர்ஸின் தலைவர் என் சந்திரசேகரன் அடுத்த 18 மாதங்களில் இந்தியாவில் நான்கு எலக்ட்ரிக் மாடல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். டாடா நெக்சானின் எலக்ட்ரிக் மாடல், டாடா ஆல்ட்ராஸ் இவி, தனியாருக்கு பவர்பூல் டிகார் இவி முதலியவை இந்த கார்களில் அடங்கும்.
‘இந்த கார்கள் தனியாரை குறிவைத்து அறிமுகம் செய்யப்படுபவை ஆகும். அதனை அறிமுகம் செய்ய எது சரியான நேரம் என ஆலோசித்து வருகிறோம். நெக்சான் இவி, ஆல்டாஸ் இவி ஆகியவை தனியாருக்கான வாகனங்களாகும்' என சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
