டாடா தியாகோவில் புது பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்..!

மெக்கானிக்கலாக, புது தியாகோ காரில் பெட்ரோல் வகை கார் மட்டுமே இருக்கும்

View Photos
புது பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் காரின் விலையிலும் மாற்றம் உள்ளது

Highlights

  • டாடா தியாகோவீன் விலை 4.40 லட்சம் ரூபாயாகும்
  • சீட் பெல்ட் ரிமைண்டர் இந்த காரில் உள்ளது
  • மெக்கானிக்கலாக இந்த காரில் மாற்றமில்லை

டாடா நிறுவனத்தின் கார்களில் பிரபலனமான ஒன்று டாடா தியாகோ (Tiago) காராகும். இந்த தியாகோ காரில் பல புது பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யபோவதாக டாடா அறிவித்துள்ளது.

2019 டாடா தியாகோ கார் இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் வசதி, இபிடி வசதி, சிஎஸ்சி வசதி, பின்பக்க பார்க்கிங் சென்சர் என சகல பாதுகாப்பு அம்சங்களையும் பெறுகிறது. இது போக அதிவேக அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டரும் இந்த புது தியாகோ காரில் உள்ளது. இந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் டாடா தியாகோ காரின் விலை 4.40 லட்சமாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாடா மோட்டர்ஸ் விற்பனை, மார்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சப்போர்ட் , பாசஞ்சர் வாகன பிசினஸ் பிரிவின் துணை தலைவர் எஸ்என் பர்மன் கூறுகையில், ‘தற்போது கார் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க துவங்கியுள்ளனர். டாடா நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாகும். இம்பாக்ட் (IMPACT) தொழிற்நுட்பத்தில் உருவான டாடா தியாகோ காருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. தற்போது அறிமுகம் செய்துள்ள பாதுகாப்பு அம்சங்களும் மக்களிடையே வரவேற்பை பெறும் என எண்ணுகிறோம்' என்றார்.

fnhqostc

புது தியாகோ காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன

இந்த தியாகோ காரில் இருக்கும் ஏனைய பாதுகாப்பு அம்சங்கள் என்னவென்றால் பகல் மற்றும் இரவு ஐஆர்விஎம், முன்பக்க பாக் லாம் (Front fog lamp), வேகத்திற்கு ஏற்ப தானியங்கி டோர் லாக், பின்பக்க ஸ்மார்ட் வைப்பர் முதலியனவை ஆகும். இந்த மாதம் துவக்கத்தில் தியாகோ காரில் ஆப்பிள் கார்பி ளே அறிமுகம் செய்யப்பட்டது.

தற்சமயம் டாடா தியாகோ காரை அப்டேட் செய்ய டாடா எண்ணியுள்ளது. இந்த அப்டேட் காரில் டாடா அல்ட்ராஸ் அகாரில் இருப்பது போன்ற டிசைன் அப்டேட்களை எதிர்பார்க்கலாம். இம்பாக்ட் 2.0 (IMPACT 2.0) இந்த புது டாடா தியாகோவில் உபயோகிக்கப்படவுள்ளது.

0 Comments

மெக்கானிக்கலாக, புது தியாகோ காரில் பெட்ரோல் வகை கார் மட்டுமே இருக்கும். புது தியாகோ மற்றும் திகார் மாடலில் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்காது. தியாகோவில் இருக்கும் பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் ரெவோட்ரான் மோட்டர் பெற்றுள்ளது. அது 6000 rpm யில் 84 bhp மற்றும் 3500 rpm யில் 114 Nm டார்க்கையும் தருகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.