லெகோ நிறுவனத்தின் புதிய வெளியீடு நம்மை மீண்டும் மழலையாக வைக்கும்!

உண்மையான காரைப் போலவே, லெகோ பொம்மை காரிலும் தனித் தனியான சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும்

View Photos

Highlights

  • 3599 கட்டங்களாக இந்த பொம்மை கார் கொடுக்கப்பட்டுள்ளது
  • உண்மையான கார் போலவே இந்த காரிலும் பாகங்கள் இருக்கும்
  • தனி சீரியல் நம்பரும் இந்த காரில் இருக்கும்

லெகோ டாய்ஸ்… பல குழந்தைகளுக்கு இது தான் கனவு. சில பெரியவர்களுக்கும் கூட! பல்லாயிரம் கோடிகளில் தினம் தினம் விற்பனையாகும் இந்த லெகோ டாய்ஸின் கார் டிசைன் பொம்மைகளுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 

lego bugatti chiron

 
ஃபெராரி நிறுவனத்தின் F40, போர்ஷ் நிறுவனத்தின் GT3 RS போன்ற கார்களின் பொம்மைகளை முன்னர் வெளியிட்டது லெகோ. இது முழு பொம்மையாக இல்லாமல், சிறு சிறு கட்டமாக கொடுக்கப்படும். இந்தக் கட்டங்களை ஒன்றிணைத்தல் என்பது தான் இந்த கார் பொம்மைகளின் தனிச் சிறப்பு. இந்நிலையில், உலக புகழ்பெற்ற புகாட்டி வாகன உற்பத்தி நிறுவனத்தின் சிரான் காரின் பொம்மையை வெளியிட்டுள்ளது லெகோ. இந்த கார் பொம்மை, 3599 கட்டங்களாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உண்மையான காரில் இருக்கும் அனைத்து பார்ட்களும் இந்த பொம்மை காரிலும் கொடுக்கப்பட்டு உள்ளது, இதன் ஸ்பெஷாலிட்டை இன்னும் அதிகரிக்கிறது.
 
lego bugatti chiron
0 Comments

இந்த பொம்மை காரின் நீளம் 22 இன்ச், அகலம் 9 இன்ச் மற்றும் உயரம் 5 இன்ச் ஆகும். ஒரிஜினல் காரின் அளவில் 8-ல் ஒரு பங்காக இந்த காரின் அளவு இருக்கும். அதே போல, உண்மையான காரைப் போலவே, லெகோ பொம்மை காரிலும் தனித் தனியான சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.