சென்னையில் PSA யின் புது டெக்னிக்கல் சென்டர் துவக்கம்...!

இந்த புது டெக்னிக்கல் சென்டரானது சென்னையின் பொருளாதார வளாகமான SEZ யில் துவங்கப்பட்டுள்ளது

View Photos
டெக்னில்லக் செண்டர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

க்ரூப்பி PSA டுடேயின் PCA மோட்டர்ஸ் இந்தியா தமிழகத்தின் சென்னையில் புது டெக்னிக்கல் சென்டரை (ITC) துவங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பணிபுரியும் PCA தொழிலாளர்கள் பயன் பெறுவாரகள் என தெரிவித்தனர்.

இந்த புது டெக்னிக்கல் சென்டரானது சென்னையின் பொருளாதார வளாகமான SEZ யில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்புகளுக்கு பொருந்தும் வகையில் இந்த சென்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக PSA தெரிவித்தது.

33in6v04

PCA மோட்டர்ஸின் சீனியர் துணைதலைவர் எரிக் அப்போடேயுடன் சி க்யூப் புரோகிராமின் தலைவர் பிராங்கோசிஸ்

இது குறித்து PSA க்ருப்பியின் இந்தியா – பசிபிக் தலைவரான எம்மானிவல் டிலே கூறுகையில், ‘PSA இந்தியாவில் வளர்ச்சியடைய முக்கியம் இந்த டெக்னிக்கல் சென்டர். இதன் மூலம் இந்தியா – பசிபிக் ஏரியாவில் எங்கள் குழுமத்தின் வளர்ச்சி பெருகும் என எண்ணுகிறோம். இந்த சென்டர் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரு ஆரோக்கியமான வேலை செய்யும் சூழலை உருவாக்கி கொடுத்துள்ளோம். உலக அரங்கில் எங்கள் நிறுவனமானது வளர்ச்சியடைய இந்தியா எவ்வளவு முக்கிய என்பது இந்த ITC மூலம் தெரியும்' என்றார்.

0 Comments

PCA மோட்டர்ஸ் இந்தியாவின் சீனியர் துணை தலைவரான எரிக் அப்போடே கூறுகையில், ‘இந்தியாவில் க்ரூப்பி PSA யின் அடுத்த முக்கியமான முன்னேற்றம் இந்த டெக்னிக்கல் சென்டராகும். இதன் மூலம் வளர்ச்சியானது விரைவாக இருக்கும் என எண்ணுகிறோம். எங்களது புது சென்டரை சுற்றி பல இந்தியா மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் பல திறமையான இந்தியர்களை நாங்கள் கவரலாம். இந்த டெக்னிக்கல் சென்டர் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் எங்கள் குழுமத்திற்கு நன்மையாகும்' என்றார்.   

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.