கொரோனா வைரஸ் நிவாரணமாக, ஹஸ்மத் கவசங்கள், பேருந்துகளை வழங்குகிறது டொயோட்டா!

language dropdown

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் கர்நாடக சுகாதாரத் துறைக்கு ஹஸ்மத் கவசங்கள் ஒப்படைக்கப்பட்டன.

expand View Photos
டொயோட்டா ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது

Highlights

  • டொயோட்டா 1,000 ஹஸ்மத் கவசங்களை பெங்களூர் மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்
  • TMF, சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 பேருந்துகளை வழங்கியுள்ளது
  • கூலித் தொழிலாளர்களுக்கு 1,000 அத்தியாவசிய கருவிகளை விநியோகித்தது

நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக, Toyota Kirloskar Motor, மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருவிகளும், பேருந்துகளையும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்தது. 

இந்நிறுவனம் சமீபத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு 1,000 அத்தியாவசிய கருவிகளையும் உணவுப் பொருட்களையும் விநியோகித்தது. 

laod259c
டொயோட்டா, கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக, மொத்தம் 3,000 ஹஸ்மத் கவசங்களை அரசுக்கு வழங்குகிறது.

டொயோட்டா, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு 1,000 ஹஸ்மத் கவசங்களை அரசு சுகாதார தன்னார்வலர்களிடம் ஒப்படைத்தது. பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (BMCRI) 10 பேருந்துகள், அதே சமயம் டொயோட்டா மொபிலிட்டி பவுண்டேஷன் TMF) 4 பேருந்துகளை சுகாதார ஊழியர்களின் போக்குவரத்து வசதியாக, ராமநகர மாவட்ட சுகாதாரத் துறைக்கு வழங்கியுள்ளது. இந்த பேருந்துகள் ஏப்ரல் 30 வரை 24x7-ல் கிடைக்கும். 

0 Comments

1,000 ஹஸ்மத் கவசங்கள் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலும், 2,000 ஹஸ்மத் அங்கிகளை அரசிடம் ஒப்படைக்கும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News