டொயோட்டா நிறுவனம் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்கியது!

language dropdown

மத்திய அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே, டொயோட்டா நிறுவனம் உட்பட பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி விட்டன.

expand View Photos
டொயோட்டா நிறுவனம் தனது கார் உற்பத்தி தொழிற்சாலையை ஜூலை 20 முதல் இயக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Highlights

  • ஜூலை 14 முதல் ஜூலை 22 வரையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது
  • அரசு வழிகாட்டுதலின்படி, ஜூலை 20 முதல் மீண்டும் உற்பத்தி தொடங்குகிறது
  • முழு கட்டுப்பாடுகள், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் இயங்க உள்ளது.

கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட டெயோட்டா கார் உற்பத்திப் பணிகள் வரும் 21 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் பிடதியில் டொயோட்டா கார் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால், அம்மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் டொயோட்டா நிறுவனமும் தனது பிடதி தொழிற்சாலையை கடந்த 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் மூடுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன் தொழிற்சாலைகளை இயக்க கர்நாடக அரசு அனுமதியளித்தது. அதன்படி, டொயோட்டா நிறுவனம் தனது கார் உற்பத்தி தொழிற்சாலையை ஜூலை 20 முதல் இயக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இது குறித்து டொயோட்டா நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலாலும், ஊரடங்கினாலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படுவதாக கூறியுள்ளது. மேலும், தற்போது கர்நாடக அரசின் ஊரடங்கு தளர்வால் மீண்டும் தொழிலாளர்கள் பணிக்கு வருகின்றனர். அரசு வழிவகுத்த நெறிமுறைகளின்படி, 40 முதல் 45 சதவீத பணியாளர்களைக் கொண்டு பிடதி ஆலை இயக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, சமூக விலகலுடன் பாதுகாப்பான முறையில் ஆலை இயக்கப்பட உள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

7n7ue2bg

கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில், பிடதி தொழிற்சாலையை மூடிய டொயோட்டா நிறுவனம்

ஏற்கனவே, டொயோட்டா நிறுவனம் தனது தொழிற்சாலை பணியாளர்கள், டீலர் பார்ட்டனர்களுக்கு பிரத்யேகமாக கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி அனைத்து ஊழியர்களும் தங்களது உடல்நிலையைப் பற்றி மேலிடத்திற்குத் தெரிவிக்க வேண்டும். ஊழியர் யாருக்காவது கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பு கொண்ட மற்ற பணியாளர்களை கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை டொயோட்டா அறிவித்துள்ளது.

509oa6fs

ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் போது,  இந்தியாவில் முதன்முறையாக டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை ஒன்று கூட நடைபெறவில்லை.

0 Comments

மத்திய அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே, டொயோட்டா நிறுவனம் உட்பட பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டன. சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு, அதாவது மே மாத இரண்டாவது வாரத்தில் டொயோட்டா நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியைத் தொடங்கியது. மே மாதத்தில் சுமார் 1,639 கார்கள் விற்றது டொயோட்டா. தொடர்ந்து ஜூன் மாதத்தில் இந்த விற்பனை இரட்டிப்பானது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News