6 மாதங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கிறது டிவிஎஸ் மோட்டார்!

சம்பளக் குறைப்பு தற்காலிகமானது மற்றும் 2020 மே முதல் அக்டோபர் வரை ஆறு மாத காலத்திற்கு இருக்கும் என்று டி.வி.எஸ் மோட்டார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View Photos
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சம்பள குறைப்பை அறிவித்துள்ளது

Highlights

  • டி.வி.எஸ் ஆறு மாதங்களுக்கு தற்காலிக சம்பள குறைப்பை அறிவிக்கிறது
  • டி.வி.எஸ் ஊழியர்களுக்கு 5% - 20% வரை ஊதியக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
  • சம்பள குறைப்பு மே முதல் செப்டம்பர் 2020 வரை 6 மாதங்கள் இருக்கும்

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. ஊரடங்கால், வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான அனைத்து வேலைகளும் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளன.

டி.வி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் 2020 மே முதல் 2020 அக்டோபர் வரை 6 மாதங்களுக்கு குறைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோவிட்-19 தொற்றால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாகவும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும், ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட உள்ளது.

பைக்

Also Read: TVS Registers Zero Sales In April 2020

மேலும், "இந்த தனித்துவமான பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, TVS Motor Company பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை தற்காலிகமாக குறைக்க உள்ளது. தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர்களின் ஊதியத்தில் எந்தக் குறைப்பும் இருக்காது.

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் நிலையில் உள்ள ஊழியர்களின் சம்பளம் 5 சதவீதமும், மூத்த நிர்வாக நிலையில் உள்ள ஊழியர்களின் சம்பளம் 15-20 சதவீதமும் குறைக்கப்படும். அதே நேரத்தில், ஊழியர்களே முன்வந்து சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டது மிகவும் ஆறுதலளிக்கிறது” என்று டி.வி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: TVS Domestic Sales Decline 55 Per Cent In March 2020

0 Comments

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், மார்ச் 2020 விற்பனையில் 55% விற்பனை சரிந்த பின்னர், ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சந்தையில் பூஜ்ஜிய விற்பனையை அறிவித்தது. உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தை விற்பனையைப் பற்றி பேசுகையில், டி.வி.எஸ் 2020 மார்ச் மாதத்தில் 62% வீழ்ச்சியை பதிவு செய்தது. தமிழ்நாட்டின் ஓசூரில் அமைந்துள்ள டி.வி.எஸ் உற்பத்தி ஆலை 2020 மார்ச் 23 அன்று இந்திய அரசால் முதன்முறையாக மூடப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare TVS Ntorq 125 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.