கொரானா பாதிப்பு எதிரொலி.. TVS நிறுவனத்துக்கு ரூ.139.07 கோடி நஷ்டம்

language dropdown

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில், டிவிஎஸ் நிறுவனத்துக்கு 139.07 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது

expand View Photos
டிவிஎஸ் நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் 139.07 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது

Highlights

  • TVS reported a decline of 67.96% in it total revenues for Q1 FY'21
  • The company also reported steep declines in its segment-wise sales
  • TVS says business environment in this fiscal will stay challenging

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு 139.07 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை நிறுவனங்கள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 

பைக்

பிரபலமான டிவிஸ் மோட்டார் நிறுவனத்தின் 20-21 நிதியாண்டின் முதல் காலாண்டு வருவாய் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 4,469.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய டிவிஎஸ் நிறுவனம், இந்தக் காலாண்டில் 1,434.3 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 67.96 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பொருளாதாரத்தை சமாளிப்பதற்காக கார், பைக், நகை வாங்கும் எண்ணத்தை மக்கள் கைவிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களால் இந்தாண்டு ஆட்டோமொபைல் விற்பனை மந்தமாகியுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

e134jpp

(டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனையும் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது)

டிவிஎஸ் நிறுவனத்தின் வருவாயை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, கடந்தாண்டு 8.84 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. ஆனால், இந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் வெறும் 2.55 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதே போல், கடந்தாண்டு 4.17 லட்சம் மோட்டார் சைக்கிள் விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 1.19 லட்சம் மோட்டார் சைக்கிளே விற்பனையாகியுள்ளது. 

0 Comments

ஸ்கூட்டர் விற்பனையைப் பொறுத்தவரையில்,  கடந்தாண்டு 2.95 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையானது. இந்த நிதியாண்டில் 0.82 லட்சம் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. இதே போல் மூன்று சக்கர வாகனங்கள் கடந்த நிதியாண்டில் 0.40 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், 0.12 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare TVS Ntorq 125 with Immediate Rivals

Latest News

Popular Bikes

Royal Enfield Classic 350

Royal Enfield Classic 350

₹ 1.6 Lakh
(On-Road Price New Delhi)
Hero Splendor Plus

Hero Splendor Plus

₹ 60,350
(On-Road Price New Delhi)
Honda Activa 5G

Honda Activa 5G

₹ 54,632
(On-Road Price New Delhi)
JAWA Perak

JAWA Perak

₹ 1.89 Lakh
(On-Road Price New Delhi)
Bajaj Pulsar 125

Bajaj Pulsar 125

₹ 69,997
(On-Road Price New Delhi)
Hero Passion Pro i3S

Hero Passion Pro i3S

₹ 64,990
(On-Road Price New Delhi)
JAWA Forty Two

JAWA Forty Two

₹ 1.65 Lakh
(On-Road Price New Delhi)
JAWA 300

JAWA 300

₹ 1.74 Lakh
(On-Road Price New Delhi)
Honda CB Shine

Honda CB Shine

₹ 68,812
(On-Road Price New Delhi)