Kia Motors: இரண்டு புது மாடல்களை அறிவித்துள்ள கியா மோட்டர்ஸ்...!

2020 எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும். ஜூலை 2020 முதல் விற்பனைக்கு வரும்.

View Photos
இந்தியாவில் கியா மோட்டர்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Highlights

  • கியா செல்டோஸ் காருக்கு 50,000 புக்கிங் பெற்றது
  • கியா கார்னிவல் ப்ரீமியம் MPV கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்
  • 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும்

இந்தியாவில் கியா மோட்டர்ஸ் (Kia Motors)  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு சான்று சமீபத்தில் அறிமுகமான கியா செல்டோஸ் (Kia Seltos) காருக்கு 50,000 புக்கிங் பெற்றது தான். இந்நிலையில் இந்தியாவில் தனது இரண்டாவது மாடலை அறிமுகம் செய்யவுள்ளது கியா மோட்டர்ஸ். கியா கார்னிவல் ப்ரீமியம் MPV கார் தான் இந்தியாவில் கியா அறிமுகம் செய்யும் இரண்டாவது கார். 2020 தில்லி ஆட்டோ எக்ஸ்போவில் (Auto Expo) அறிமுக செய்யப்படவிருக்கும் இந்த கார் ஆந்திராவிலுள்ள அனந்த்பூர் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இது டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.

bd047uro
இதன் டெக்னிக்கல் விவரங்கள் அனைத்தும் புதியதாக உள்ளது

கியாவிலிருந்து வரும் மூன்றாவது மாடல் QYI (உள்நாட்டில் QY என்றும் அழைக்கப்படுகிறது)  ஆகும். இது இந்தியாவில் தான் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது புதிதாக இந்தியாவில் தயாரிக்கப்படும். ஆரம்பத்தில் உள்நாட்டு விற்பனைக்கும் பின்னர் ஏற்றுமதிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரானது துணை காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் வரும். ஏற்கனவே எஸ்யூவிகளில் கியா செல்டோஸ் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து மற்றுமொரு காரை கியா மோட்டர்ஸ் அறிமுகம் செய்கிறது. ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸன் போன்றவற்றுடன் இந்த புது கார்  போட்டியிடும். இதுவும் 2020 எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும். ஜூலை 2020 முதல் விற்பனைக்கு வரும்.

கார்

kia stonic compact crossover

கியா மோட்டர்ஸ் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

மூன்றாம் தலைமுறை கியா கார்னிவல் 2015 முதல் உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அமெரிக்காவில் கியா செடோனாவாக விற்கப்படுகிறது. சில டெக்னிக்கல் மாற்றங்களை பெற்று இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மின்சாரம் ஸ்லைட் பின்புற கதவு, பெரிய சன்ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8 அங்குல தொடுதிரை, இணைக்கப்பட்ட கார் பயன்பாடு மற்றும் இணைய சேவைகள் (யு.வி.ஓ கனெக்ட்) மற்றும் சுற்றுப்புற விளக்குகள் ஆகியவற்றை இந்த காரில் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே செல்டோஸில் இருந்த காற்று சுத்திகரிப்பு விருப்பத்தை வழங்கவும் கியா பரிசீலித்து வருகிறார். இது தவிர பல ஏர்பேக்குகள், ஐசோபிக்ஸ் குழந்தை இருக்கை லாக், ஈபிடி, ஏபிஎஸ் மற்றும் இழுவைக் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இருக்கும். 7-8 இருக்கை வசதி கொண்ட இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்க வாய்ப்புள்ளது.

1pkvqglo

அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரும்

0 Comments

QYI எஸ்யூவி செல்டோஸில் காணப்படுவது போன்ற டெக்னிக்கல் விஷயங்களை வழங்கும். துடிப்பான வண்ணங்கள், இரு-தொனி கூரை மற்றும் தனிப்பயனாக்குதலுக்கான விருப்பங்கள் ஏராளமாக எதிர்பார்க்கலாம். இது ஒன்றுக்கு மேற்பட்ட தானியங்கி பரிமாற்ற விருப்பங்களுடன் வர வாய்ப்புள்ளது மெக்கானிக்கலாக 1.0 டர்போ ஜிடிஐ பெட்ரோலில் அதிக கவனம் காட்ட வாய்ப்புள்ளது. இது ஹூண்டாய் வென்யூ உடன் தயாராக வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் முக்கிய நிறுவனமாக நிலைநாட்ட கியா  மோட்டர்ஸின் முயற்சியில் இதுவும் ஒன்று.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Kia Seltos with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.