Two-Wheeler Sales October 2019: உள்நாட்டு விற்பனையில் டிவிஎஸ் வீழ்ச்சி !!

நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2018 அக்டோபரில் 57,926 ஆக இருந்தது. 2019 அக்டோபரில் 69,339 ஆக அதிகரித்துள்ளது

expand View Photos
மூன்று சக்கர விற்பனை 8 சதவீதம் அதிகரித்தது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 அக்டோபர் மாதத்தில் 328,368 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது, இது 2018 அக்டோபர் மாதத்தில் 398,427 யூனிட் விற்பனையை விட 2 சதவீத வீழ்ச்சியைக் காட்டுகிறது. மறுபுறம் அந்நிறுவனம் அக்டோபர் 2018 யில் விற்ற 3,38,988 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது ​​2019 அக்டோபரில் 2,52,684 யூனிட்டுகள் விற்கப்பட்டது. இது 25.46 சதவீதம் சரிவாகும்.

அக்டோபர் 2018 யில் மொத்த இருசக்கர வாகனம் 3,08,161 யூனிட்டுகளின் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது 2018 அக்டோபர் மாதத்தில் 3,84,307 யூனிட்டுகளின் விற்பனையை விட 19.81 சதவீதம் குறைவாகும். அக்டோபர் 2018 யில் 1,50,429 யூனிட்டுகளின் விற்பனையை விட 2019 அக்டோபரில் மொத்த மோட்டார் சைக்கிள் 1,25,660 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது, இது 16.47 சதவீதம் குறைவாகும். நிறுவனத்தின் மொத்த ஸ்கூட்டர் விற்பனை 2019 அக்டோபரில் 1,21,437 யூனிட்களை பதிவு செய்துள்ளது. இது 2018 அக்டோபரில் 1,51,040 யூனிட்டுகளின் விற்பனையை விட 19.06 சதவீதம் குறைவாகும்.

நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2018 அக்டோபரில் 57,926 ஆக இருந்தது. 2019 அக்டோபரில் 69,339 ஆக அதிகரித்துள்ளது. இரு சக்கர ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து 2018 அக்டோபரில் 45,319 யூனிட்டுகளிலிருந்து 2019 அக்டோபரில் 55,477 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதேபோல், மூன்று சக்கர விற்பனை 8 சதவீதம் அதிகரித்து 2018 அக்டோபரில் 14,120 யூனிட்டுகளில் இருந்து 2019 அக்டோபரில் 15,207 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

பண்டிகை மாதத்திற்கான விற்பனையாக இருக்கும் நவம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019 மாத விற்பனையை ஒப்பிட்டுப் பார்த்தால், டிவிஎஸ் 2018 அக்டோபரில் 3,07,142 யூனிட்டுகளை விற்றது. இது 2019 அக்டோபரில் 3,08,161 யூனிட்டுகளாக இருந்தது. இது 0.33 சதவீதம் வளர்ச்சியாகும்.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News