உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகன நிறுவனகள் தங்களது கார்களை அறிமுகபடுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரியில் இங்கிலாந்தை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் தங்களது தயாரிப்பு ஆலையை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
லண்டனை சேர்ந்த லாரேட்டி ஆட்டோ நிறுவனம் புதுச்சேரியில் தயாரிப்பு ஆலையை ஆரம்பிக்க போவதாக புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
2800 கோடி முதலீடு செய்து வருடம் 10000 எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ளது லாரேட்டி நிறுவனம். புதுச்சேரி அரசுக்கு சொந்தமான 350 ஏக்கர் நிலம் காரைகாலில் உள்ளது. அங்கு தான் இந்த தயாரிப்பு ஆலை வரவுள்ளது.
‘புதுச்சேரியில் 9 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த வாகன நெரிச்சலையை கட்டுபடுத்த பல திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்' என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.









