வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களின் வேலிடிட்டி காலத்தை நீட்டித்த மத்திய அரசு..!

language dropdown

தற்போது இந்தியாவில் ‘அன்லாக் 1.0’ அமலில் உள்ளது.

expand View Photos
முன்னதாக வாகனங்களின் ஆவணங்களுக்கான வேலிடிட்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. 

Highlights

  • அனைத்து வாகனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்
  • பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பின்னரான ஆவணங்களுக்கு இது செல்லும்
  • கால தாமதம் ஏற்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெருஞ்சாலைத் துறை அமைச்சகம், நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்களின் வேலிடிட்டி காலத்தை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட ஃபிட்னஸ் சான்றிதழ், பெர்மிட் (அனைத்து வகைகளும்), ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகளுக்கு செப்டம்பர் இறுதி வரை வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், மக்கள் தங்கள் வாகனம் குறித்தான ஆவணங்களை மறு பதிவு செய்வது, வேலிடிட்டியை நீட்டிப்பது உள்ளிட்டப் பணிகளை செய்ய முடியாமல் உள்ளனர். இதனைக் கணக்கில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாகனங்களின் ஆவணங்களுக்கான வேலிடிட்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. 

8ihbqsec

பிப்ரவரிக்குப் பின்னரான ஆவணங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

அதற்கு முன்னர் மார்ச் 30 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு தரப்பு, மே 31 வரை வேலிடிட்டி காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக கூறியது. பின்னர் அது மே மாத இறுதியில், ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று வேகமெடுத்ததைத் தொடர்ந்து அது ஜூலை 31 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. 

தற்போது கோவிட்-19 தொற்று குறித்தான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதனால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, ஆவணங்களின் வேலிடிட்டி காலத்தை நீட்டித்து உத்தரவிடுமாறு தன் அமைச்சகத்திடம் கூறியுள்ளார். 

kjn47d0g

மறு பதிவு வசூலித்தல் குறித்தும் ஆணை பிறப்பித்துள்ளது அரசு தரப்பு.

அதேபோல மத்திய மோட்டர் வாகனச் சட்டம், 1989ன் படி, மறு பதிவு கட்டணம் வசூலிப்பதற்குத் தற்காலிக தடை விதித்து, மே 21 ஆம் தேதி ஆணை வெளியிட்டது அரசு. அந்த ஆணை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 

0 Comments

தற்போது இந்தியாவில் ‘அன்லாக் 1.0' அமலில் உள்ளது. இதன்படி, பொதுப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, நகருக்குள் பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, தனியார் வாகனங்கள் சாலையில் தடையின்றி செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News