வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தில் மீண்டும் ஊழலா?

ஜெர்மனியில் சுமார் 30,000 கார்களில் மென்பொருள் ஊழல் நடந்துள்ளதாக KBA தெரிவித்துள்ளது. 

View Photos

சில ஆண்டுகளுக்கு முன்னர், மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சையில் சிக்கியது ஜெர்மன் கார் தயாரிப்பாளரான வோல்க்ஸ்வாகன் நிறுவனம். சட்ட சிக்கல்கள் சந்தித்தப் பின்னர் தற்போது டாப் கார் நிறுவனங்களில் ஒன்றாக வோல்க்ஸ்வாகன் திகழ்கிறது.

இப்பொழுது புது சர்ச்சையாக, ஜெர்மனியின் வாகன கட்டுப்பாட்டு அமைப்பு (KBA), மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீற வோல்க்ஸ்வாகன் தனது மென்பொருளில் மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அதனை விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கார்

இந்த ஊழல், 1.2 லிட்டர் இன்ஜின் வாகனங்களில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக வோல்க்ஸ்வாகன் போலோவில் இந்த மென்பொருள் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

2015-இல் தனது டீசல் இன்ஜின்களின் மென்பொருளில் ஊழல் செய்ததாக வோல்க்ஸ்வாகன் ஒப்புகொண்டது. அதனால், லட்சக்கணக்கான வாகனங்களை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றது.

0 Comments

இப்படிப்பட்ட சூழலில், ஜெர்மனியில் சுமார் 30,000 கார்களில் மென்பொருள் ஊழல் நடந்துள்ளதாக KBA தெரிவித்துள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Volkswagen T-Roc with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.