ஒரே மாதத்தில் 9.5 லட்சம் வாகனங்களை விற்ற வோல்க்ஸ்வாகன் குழுமம்

ஜெர்மனியில் வி.டபிள்யூ குழுமத்தின் மொத்த விநியோகங்கள் 41.5 சதவீதம் அதிகரித்து 1,12,400 யூனிட்டுகளாக உள்ளன.

expand View Photos
சீனாவில் 6.6 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தது வோல்க்ஸ்வாகன் குழுமம்

வோக்ஸ்வாகன் குழுமம் 2019 அக்டோபர் மாதத்திற்கான உலகளாவிய விநியோக புள்ளிவிவரங்களை அறிவித்துள்ளது, இது 9,49,800 வாகனங்களை விற்றுள்ளது. இதன் மூலம், நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வழங்கப்பட்ட 8,46,300 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 12.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வி.டபிள்யூ குழுமம் சீனாவில் 6.6 சதவீத வளர்ச்சியைக் கண்டது. இது உலகின் மிகப்பெரிய ஒற்றை சந்தையாகும். அங்கு குழு பிராண்டுகள் மொத்தமாக 3,89,300 வாகனங்களை விற்றுள்ளது. இதேபோல் ஐரோப்பாவில் அக்டோபருக்கான நிறுவனத்தின் விநியோகம் 25.5 சதவீதம் அதிகரித்து 3,70,700 ஆக இருந்தது. அதே நேரத்தில் அதன் வீட்டுச் சந்தையான ஜெர்மனியில் வி.டபிள்யூ குழுமத்தின் மொத்த விநியோகங்கள் 41.5 சதவீதம் அதிகரித்து 1,12,400 யூனிட்டுகளாக உள்ளன.

அக்டோபர் 2019 யில் நிறுவனத்தின் வலுவான விநியோகங்களைப் பற்றி பேசுகையில், வோக்ஸ்வாகன் குழும விற்பனையின் தலைவரான கிறிஸ்டியன் டால்ஹெய்ம், "வோக்ஸ்வாகன் குழும பிராண்டுகள் அக்டோபரில் ஒரு வலுவான விநியோக செயல்திறனை உருவாக்கியது. நாங்கள் அனைத்து முக்கிய பிராந்தியங்களிலும் சந்தையை விட சிறப்பாக செயல்பட்டோம். மீண்டும் எங்கள் சந்தை பங்குகளை கணிசமாக விரிவுபடுத்தினோம். எங்கள் மிகப்பெரிய சந்தையான சீனாவில் WLTP யின் விளைவாக ஒரு வருடம் முன்பு இழந்த சந்தையை உருவாக்குவதற்கு மேலாகவும்  எங்கள் ஜெர்மனியின் சந்தையில் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டினோம் என்பதையும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

வோக்ஸ்வாகன் குழுமம் ஒட்டுமொத்த சந்தைகளை சுருக்கி வட மற்றும் தென் அமெரிக்காவின் பிராந்தியங்களில் தனது சந்தைப் பங்குகளை விரிவுபடுத்துவதில் வெற்றி பெற்றது. வட அமெரிக்காவில் வி.டபிள்யூ குழுமத்தின் கடந்த மாத மொத்த விநியோகங்கள் 80,400 ஆக இருந்தது. 0.9 சதவீத வளர்ச்சியுடன் அமெரிக்காவில் மட்டும் விநியோகங்கள் 5.8 சதவீதம் அதிகரித்து 53,200 ஆக இருந்தது. இருப்பினும் தென் அமெரிக்காவில் வி.டபிள்யூ குழுமத்தின் மொத்த விநியோகங்கள் 1.2 சதவீதம் குறைந்து 53,800 ஆக இருந்தது. ஆனால் பிரேசிலில் விநியோகங்கள் 2.9 சதவீதம் அதிகரித்து 43,000 ஆக இருந்தது. அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த பொருளாதார சூழல் குழு பிராண்டுகளுக்கு சவாலாக இருந்தது. அக்டோபர் 2019 யில் 5,300 வாகன விநியோகங்களுடன் நிறுவனம் 2018 அக்டோபருடன் ஒப்பிடும்போது 24.4 சதவீதம் சரிவைக் கண்டது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Toyota Urban Cruiser

एसयूवी, 17.03 - 18.76 Kmpl
Toyota Urban Cruiser
Price Starts
₹ 8.4 - 11.3 Lakh
EMI Starts
₹ 17,437 9% / 5 yrs

Kia Sonet

एसयूवी, 18.2 - 24.1 Kmpl
Kia Sonet
Price Starts
₹ 6.71 - 11.99 Lakh
EMI Starts
₹ 13,929 9% / 5 yrs

Audi RS Q8

एसयूवी, 8.2 Kmpl
Audi RS Q8
Price Starts
₹ 2.07 Crore
EMI Starts
₹ 4,29,698 9% / 5 yrs

Honda Jazz

हैचबैक, 17.1 - 18.2 Kmpl
Honda Jazz
Price Starts
₹ 7.5 - 9.74 Lakh
EMI Starts
₹ 15,567 9% / 5 yrs

Audi RS7 Sportback

सेडान, 11.6 Kmpl
Audi RS7 Sportback
Price Starts
₹ 1.94 Crore
EMI Starts
₹ 4,02,712 9% / 5 yrs

Honda City

सेडान, 17.8 - 24.1 Kmpl
Honda City
Price Starts
₹ 10.89 - 14.64 Lakh
EMI Starts
₹ 22,606 9% / 5 yrs

Hyundai Tucson

एसयूवी, 12.95 - 16.38 Kmpl
Hyundai Tucson
Price Starts
₹ 22.3 - 27.03 Lakh
EMI Starts
₹ 46,291 9% / 5 yrs

MG Hector Plus

एसयूवी, 13 - 17 Kmpl
MG Hector Plus
Price Starts
₹ 13.74 - 18.69 Lakh
EMI Starts
₹ 28,518 9% / 5 yrs