அசத்தலான டாடா டீகோ என்.ஆர்.ஜி-யில் என்ன எதிர்பார்க்கலாம்?

டீகோ மாடலில் பல்வேறு அம்சங்களை மாற்றாமல் உள் மற்றும் வெளிப்புற அமைப்பில் சிறிய அளவில் மாற்றப்பட்டு என்.ஆர்.ஜி. வடிவமைக்கப்பட்டுள்ளது.

View Photos
தி டாடா டீகோ என்.ஆர்.ஜி. நாளை லான்ச் செய்யப்படுகிறது

டாடா மோட்டார்ஸில் வெளிவரும் வாகனங்களில் டீகோதான் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்த மாடலை மேலும் மெருகேற்ற டாடா மோட்டார்ஸ் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் டாடா டீகோ என்.ஆர்.ஜி. நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. டீகோ மாடலில் பல்வேறு அம்சங்களை மாற்றாமல் உள் மற்றும் வெளிப்புற அமைப்பில் சிறிய அளவில் மாற்றப்பட்டு என்.ஆர்.ஜி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள கிராஸ்-ஹேட்ஸ் பகுதி ஹோண்டா டபிள்யூ.ஆர்.-வி, ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் உள்ளிட்ட கார்களில் பிரபலம். மேலும் என்.ஆர்.ஜி.யில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்...

ஸ்டைலிங்

நகர சாலைகளில் சிறப்பாக செல்லும் என்று டீகோ என்.ஆர்.ஜி.யை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விளம்பரப்படுதி வருகிறது. 3793 மி.மீ. நீளம், 1665 மி.மீ அகலம், 1587 மி.மீ. உயரம் கொண்டதாக என்.ஆர்.ஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. 180 மி.மீட்டர் உயரத்தில் கிரவுண்ட் கிளியரன்ஸ் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. பம்பர், சைடு ஸ்கர்ட்ஸ் மற்றும் சக்கரங்கள் அருகே கருப்பு வண்ணத்தில் கிளாடிங் அமைக்கப்பட்டுள்ளது. கறுப்பு வண்ணத்தில் ரூஃப் ரெய்ல்ஸ், பம்பரில் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட் ஆகியவை ஸ்டைலிஷான தோற்றத்தை அளிக்கின்றன. உள்ளமைப்பில் டீகோ என்.ஆர்.ஜி-யில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஆனால் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

2e2nv334

‘அர்பன் டஃப் ரோடர்’ என்று என்.ஆர்.ஜி.யை டாடா மோட்டார்ஸ் விளம்பரப்படுத்துகிறது

சிறப்பம்சங்கள்

14 இன்ச் அலாய் வீலுடன் டீகோ என்.ஆர்.ஜி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூஃப் மவுன்டட் ஸ்பாய்லர் இதற்கு ஸ்டைலிஷான தோற்றத்தை தருகிறது. இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்ட வசதிகள் டீகோவில் இருந்ததைப்போன்று என்.ஆர்.ஜி.யிலும் அமைக்கப்பட்டுள்ளன.

என்ஜின்

பவர் ட்ரெய்ன் சிஸ்டத்தைப் பொறுத்தவரையில்  பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினில் உள்ள அனைத்து அம்சங்களையும் என்.ஆர்.சி. கொண்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 84 பி.எச்.பி. பவரையும், 114 நானோ மீட்டர் திறனையும், 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் 69 பி.எச்.பி. பவரையும், 140 நானோ மீட்டர் திறனையும் வழங்கும். இந்த 2 எஞ்சின்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்கள் உள்ளன.

விலை எதிர்பார்ப்பு

0 Comments

பெட்ரோல் காரை பொறுத்த அளவில் ரூ. 5.7 லட்சத்திற்கும், டீசல் காரை பொறுத்தவரையில் ரூ. 6.5 லட்சத்திற்கும் டீகோ என்.ஆர்.ஜி. விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.