யமஹாவின் அடுத்த பைக் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. MT-15 என பெயரிடப்பட்டுள்ள இந்த புது பைக், மார்ச் 15,2019 விற்பனைக்கு வரும்.
மெக்கானிக்கலாக R15 க்கும் இந்த புது MT-15 க்கும் பெரிய மாற்றங்கள் இல்லை. 155.1 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட் இன்ஜின் உடன் . MT-15 வருகிறது. 6 கியர் வசதியுள்ள இதில், அதிகபட்சமாக 19 bhp மற்றும் 14.7 Nm டார்க் பவர் இருக்கிறது.
முன் பகுதியில் 282 mm டிஸ்க், பின் பகுதியில் 200 mm டிஸ்க் உடன் வரும் இதில் LED விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 1.15 – 1.25 இலட்சத்திற்குள் இதன் விலை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த MT-15 பைக்கானது KTM 125 டியூக் வண்டிக்கு போட்டியாக இறக்கப்படுகிறது. KTM 125 டியூக் விலை 1.19 இலட்சமாகும்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.