யமஹா ரே இசட்ஆர் 'ஸ்ட்ரீட் ரேலி' எடிஷன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது; விலை ரூ. 57,898

யமஹா ரே இசட்ஆர் ’ஸ்ட்ரீட் ரேலி’ எடிஷன் இந்தியாவில் ரூ. 57,898 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது

View Photos

இந்திய யமஷா மோட்டார் நிறுவனம் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் எடிஷனை இந்தியாவில் ரூ. 57,898 என்கிற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முதலில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் இதன் வடிவமைப்பு யமஹாவின் மற்ற குளோபல் மாடல்களின் தாக்கத்திலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என யமஹா தெரிவித்துள்ளது. இந்த ரே ’ஸ்ட்ரீட் ரேலி’ எடிஷன் ஸ்டாண்டர்ட் ரே இசட்ஆர் மாடலில் இருந்து ஸ்போர்ட்டிவ் லுக் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் அலங்கரிக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. இதன் ஹெட்லைட் யமஹா எம்டி - 09 தாக்கத்திலிருந்து விங் போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டு ஸ்கூட்டருக்கு ஒரு ஸ்போர்டிவ் லுக் தருகிறது. கைகளை பாதுகாக்க புதிய நக்கிள் கார்ட் சேர்க்கப்பட்டிருக்கிறது. மற்ற் அம்சங்கள் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்டல் கன்சோல், ’ரைசிங் ஏர்’ ரியர் எண்ட் மற்றும் ரோலர் ராக்கர் ஆர்ம் உள்ளது.

rdq1e3j

வாகனத்தின் அறிமுகம் பற்றி யமஹா விற்பனை பிரிவு மூத்த துணை தலைவர் ராய் குரியன் பேசுகையில், “யமஹா சிக்னஸ் ரே இசட் ஆர் பவர் மற்றும் ஸ்டைல் இணைத்து வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கும். யமஹாவின் மரபுப்படி தயாரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் வடிவம் ஆகியவற்றின் மூலம் ’ஸ்ட்ரீட் ரேலி’ ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்ஸ் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமானதாக இருக்கும். உலகளவில் அறியப்படுகிற யமஹாவின் தனித்துவ வடிவம் ‘’ஸ்ட்ரீட் ரேலி மாடலை இந்திய இரு சக்கர வாகனச் சந்தையில் அதன் ஏற்றத்தை அதிகரிக்கும்.” என்றார்.

பைக்

0 Comments

சிக்ணஸ் ரே இசட்ஆட் ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ரேல்லி ரெட் மற்றும் ரேசிங் ப்ளு என இரண்டு நிறங்களில் வர இருக்கிறது, இந்த ஸ்கூட்டர்கள் ஜூலை 2018 கடைசி வாரத்தில் முகவர்களிடம் சேர இருக்கிறது என யமஹா தெரிவித்துள்ளது. ஸ்ட்ரீட் ரேலி மாடல் ஸ்கூட்டர் 7.2 பிஹச்பி மற்றும் 8.1 என்எம் டார்க் திறனில் வரும் ப்ளூ கோர் எஞ்சின் பயன்படுத்துகிறது. இதன் எஞ்சின் சிவிடி யூனிட்டுடன் இணைக்கப்பட உள்ளது. இதன் மற்ற அம்சங்கள் 170 மிமி முன்பக்க டிஸ்க் ப்ரேக், 21 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோவேஜ், முன் பாக்கெட், கீ செக்யூர் க்ரிப் மற்றும் இரண்டு லெவல் சிங்கிள் சீட் ஆகியனவும் அடங்கும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Yamaha R15 V3.0 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.